நலம் தரும் சொல் எது
ஒரு சமயம் காஞ்சி மஹா பெரியவரிடம் ‘‘தினமும் திவ்ய பிரபந்தம் முழுவதையும் படித்த பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ’’என அன்பர் ஒருவர் கேட்டார்.
அதற்கு மஹாபெரியவர், இந்தப் பாசுரம் ஒன்று போதும். இது திவ்யப் பிரபந்தத்தின் சாரம், திருமந்திரத்தின் அர்த்தம். ஒருவர் இறக்கும் தருவாயில் கூட இந்த பாடலைக் காதில் சொன்னாலே போதும் அவருக்கு முக்தி கிடைக்கும். இதோ அப்பாடல்...
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
இதனை பாடியவர் ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார். இவர் வடக்கு முதல் தெற்கு வரையுள்ள வைணவத் தலங்களைத் தரிசித்தவர். இவருடைய பாடல்கள் எளிதில் புரியும் தன்மை உடையது. நாமும் இவருடைய பாடல்களை படித்தால் நலம் பெறலாம். திருமங்கையாழ்வாரின் குருபூஜை வைபவம் (7 – 12 – 2022 ) கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று கொண்டாடப்பெறும்.