வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை
ADDED :1408 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே உள்ள வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழன் 4 கால ஆரத்தி பூஜை அன்னதானம் மற்றும் பல்லாக்கு பவனி நடந்தது. நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய புத்தாடை அணிவித்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவை பல்லக்கில் தூக்கிச் செல்ல பல்லக்குபவனி நடந்தது. இரவு 10 மணிக்கு நிறைவு ஆரத்தி பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.