யதா யதா ஹி தர்மஸ்ய.. இன்று கீதா ஜெயந்தி : கிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள்
ADDED :1054 days ago
இன்று கீதா ஜெயந்தி . வேத இலக்கியங்களின் சாராம்சமாக விளங்கும் பகவத் கீதை, மனித வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருஷேத்திரப் போர்க்களத்தில், அர்ஜூனனுக்கு ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்ததை நினைவுக் கூறும் வகையில், கீதா ஜெயந்தி விழா, உலகெங்கிலும் உள்ள இன்று கொண்டாடப்படுகிறது. போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் அர்ஜூனன் குழப்பத்தில் ஆழ்ந்தான். அப்போது கிருஷ்ணர் உபதேசித்த தத்துவமே பகவத் கீதை. அதன் மூலம் மனத்தெளிவு பெற்ற அவன், போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தினமும் கீதையை படித்தால் அமைதி மட்டுமின்றி கீதாசாரியன் கண்ணன் அருளும் கிடைக்கும்.