பண்ணாரி கோவில் மருத்துவ மையம் காணொலி காட்சி மூலம் திறப்பு
ADDED :1051 days ago
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் மருத்துவ மையம் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் கோவிலக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவ மையத்தினை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள், பார்வையிட்டனர்.நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கோவில் அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.