உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக விழா: ராவத்தூரில் முளைப்பாலிகை ஊர்வலம்

கும்பாபிஷேக விழா: ராவத்தூரில் முளைப்பாலிகை ஊர்வலம்

சூலூர்: கும்பாபிஷேக விழாவை ஒட்டி, ராவத்தூரில் முளைப்பாலிகை ஊர்வலம் நேற்று நடந்தது. சூலூர் அடுத்த ராவத்தூரில் உள்ள, ஸ்ரீ ராஜ கணபதி, ஸ்ரீ கண் தந்த மாரியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு, வர்ணம் தீட்டுதல், முன் மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்து, நேற்று காலை, ராஜ கணபதி கோவிலில் இருந்து, மேள, தாளத்துடன் முளைப்பாலிகை ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, முதல்கால ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. வரும், 4 ம்தேதி காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, காலை, 8:30 மணிக்கு ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ கண் தந்த மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !