காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1180 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த குண்டகட்ட. சீனிவாச மூர்த்தி குடும்பத்தினர் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை நன்கொடையாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரகா சீனிவாசலுவிடம் வழங்கினர்.முன்னதாக இவருக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து கோயில் சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.