காணிப்பாக்கம் வரசித்து விநாயகர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1185 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் அய்யால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்து விநாயகர் கோயிலில் கடந்த 17. 11. 2022 முதல் 5 .12. 2022 வரை பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை என்னும்படி இன்று கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர் .அதில் தங்கம் 80 கிராம் வெள்ளி ஒரு கிலோ 390 கிராம் மற்றும் பக்தர்கள் உண்டியலில் கடந்த 17 நாட்களில் பணமாக செலுத்திய காணிக்கை பணம் ஒரு கோடியே 43 லட்சத்து 93 ஆயிரத்து 201 ரூபாயும் வெளிநாட்டினர் செலுத்திய காணிக்கை பணம் பௌன்ட்ஸ் மற்றும் டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி தெரியப்படுத்தினார்.