உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா 9ம் நாள்: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை தீப திருவிழா 9ம் நாள்: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒன்பதாம் நாள் தீப திருவிழாவில் நேற்று, புருஷாமுனி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவின், ஒன்பதாம் நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு,  மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷாமுனி வாகனத்தில்  சந்திரசேகரர் (உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்)   அலங்கரிக்கப்பட்டு மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


இதைத்தொடர்ந்து இரவு, 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான, விநாயகர் மூஷிக வாகனத்திலும், புருஷாமுனி வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ராவனேஷ்வரர் வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மன் மற்றும் புலிக்குட்டி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !