உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பத்தாம் நாளான நேற்று  இரவு உற்சவத்தில், ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று  மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து இன்று  பௌர்ணமி நாள் என்பதால்  பக்தர்களின் கூட்டம்  அதிக அளவிலேயே காணப்பட்டது.  சுவாமி தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில்  நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை தொடர்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !