ராமர் கோவிலில் சத்யநாராயண பூஜை: தேங்காய் வைத்து வழிபாடு
கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மட்டையுடன் கூடிய பிரார்த்தனை தேங்காய் வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கோவை ராம் நகர் கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை நடந்தது. கோதண்டராமர், ஆஞ்சநேயர், விநாயகர், சிவபெருமான் சன்னிநிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து ராமர் கோவிலில் உள்ள அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில் மாலை 6:30 மணிக்கு சத்யநாராயண பூஜை நடந்தது. இதில் சத்யநாராயணன் படம் எழுந்தருளுவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. தவிற்பன்னர்கள் சத்யநாராயண ஸ்கந்தபுரணாத்தை பாராயணம் செய்தனர். இதில் ஸ்ரீ மந்நாராயணன், நாரதருக்கு உபதேசித்த, நான்குபேர் அனுக்கிரஹம் அடைந்தனர். அதில் ஒரு விறகு வியாபாரிக்கு ஏழ்மையும், புரசூல்மஹாராஜா மற்றும் சாது என்ற வணிகருக்கு புத்திரபாக்கியமும் கிடைத்தது. அதனால் பவுர்ணமி நன்னாளியில் பெரும்பாலான மக்கள் சத்யநாராயண பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். கோதண்டராமர் கோவிலில் மாலை சத்யநாராயண பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பிரார்த்தனை தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.