பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தில் பௌர்ணமி பூஜை
ADDED :1364 days ago
நத்தம்: நத்தம் அருகே இடையபட்டியில் பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தில் கார்த்திகை பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாண்டி முனீஸ்வரருக்கு சிலைக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் பாண்டி முனீஸ்வரருக்கு படையல் படைத்து பூஜைகள் நடந்தது. இதைப்போலவே குபேர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து எட்டுக்கை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.