சாத்தனூர் கழனிருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4799 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சாத்தனூர் கழனிருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் தலைமையில் நடந்தது. மகா கணபதி ஹோமம், ஆறு கால யாக பூஜைகளுடன் துவங்கிய விழா, தீபாராதனை, கருட வருகைக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் மாடசாமி, சாத்தனூர் ஊராட்சி தலைவர் செல்வம், கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.