உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரியூர் அருளானந்தர் ஆலய கொடியேற்றம்!

ஓரியூர் அருளானந்தர் ஆலய கொடியேற்றம்!

திருவாடானை: ஓரியூர் அருளானந்தர் ஆலயத்தில், ஆரோக்கிய அன்னை பிறப்பு விழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. பாளையங்கோட்டை சவேரியார் ஆலய பாதிரியார் வின்சென்ட் பிரிட்டோ தலைமை வகித்தார். அருளானந்தர் ஆலய பாதிரியார் டார்வின் எஸ்.மைக்கிள், தாளாளர் பிரான்சிஸ் சேல்ஸ், பொருளாளர் ஜார்ஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி, செப்.7ல் நடக்கிறது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை, குணமளிக்கும் வழிபாடுகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !