திருப்பரங்குன்றம் கோயிலில் நெல்லி மர பூஜை
ADDED :1037 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான சொக்கநாதர் கோயிலில் காசுக்கார செட்டியார்கள் சார்பில் இன்று சிறப்பு பூஜை நடந்தது. சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நெல்லி மர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை, தீபாராதனை நடந்தது. சொக்கநாதருக்கு வெள்ளி நாகாபரணம் மற்றும் கவசம், மீனாட்சி அம்மனுக்கு கவசம் சாத்துக்குடியானது. கவசங்கள் சாத்துப்படியாவது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே. தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி கோயில் மூலவர்கள் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், சுப்பிரமணிய சுவாமி, மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகங்கள், பூஜை நடந்தது.