உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை

ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை

ஆலாந்துறை: செம்மேட்டில், கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடந்தது.

செம்மேட்டில் ஊர் பொதுமக்கள் சார்பில், கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை நேற்று நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, நொஞ்சல் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ வல்லப கணபதி கோவிலிலிருந்து, முத்து மாரியம்மன் கோவில் வளாகத்திற்கு, ஐயப்ப சுவாமி உற்சவர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், ஊர் பொதுமக்கள், விளக்கேற்றி பூஜை செய்து ஐயப்ப பஜனை செய்தனர். அதன்பின், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இரவு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !