உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கருமத்தம்பட்டி: சோளக்காட்டுப்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோளக்காட்டுப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் கருப்பராயன் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு வினரின் ஒயிலாட்டம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள், கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீ செல்ல விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் கருப்பராய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம் மற்றும் மகா அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !