காட்டுமன்னார்கோவில் ஐயப்பன் கோவிலில் சுவாமி புறப்பட உற்சவம்
ADDED :1111 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி புறப்பாடு உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் மேல்கரையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமி புறப்பாடு உற்சவம் நடந்தது விழாவையொட்டி 10 ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ஐயப்ப முவாமிக்கு மஹாபிக்ஷஷகம் நடந்தது. 11.30 மணிக்க மஹா பூஜை துவங்கியது. மதியம் 1.30 க்கு படி பூஜை, மகா தீபாராதனை, கஞ்சி வார்த்தல், பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு பம்பா விளக்கு விடுதலும், தீப ஆரத்தியும் நடந்தது. அதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் அருள்மிகு ஐயப்ப சுவாமி விதியுலா காட்சி நடந்தது.