பெசன்ட்நகர் வேளாங்கன்னி கோவிலில் துறவற சபைகள் விழா!
ADDED :4852 days ago
சென்னை: பெசன்ட்நகர், அன்னை வேளாங்கன்னி கோவிலின் 40ம் ஆண்டு திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று துறவற சபைகள் விழா நடைபெற்றது. விழாவில் ஜார்ஜ்டவுன் கோவில் பங்குத்தந்தை தேவாஜோ திருப்பலி நிகழ்த்தினார். வேளாங்கன்னி கோவில் பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல், உதவி பங்குத்தந்தை தாஸ், நிர்வாகி தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர். துறவற சபைகள் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.