ஏர்வாடி சந்தனக்கூடு விழா: செப். 17ல் துவக்கம்!
ADDED :4795 days ago
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, செப்., 17ல் துவங்கிறது, என தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் கூறினார். அவர் கூறியதாவது: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், நடப்பாண்டில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, செப்.,17ல் மவுலீது ஓதப்படும், 27ல் கொடியேற்றம், அக்.,9ல் உரூஸ் என்னும் சந்தனக்கூடு நடக்கிறது. அக்., 16ல் கொடி இறக்கப்பட்டு, பக்தர்களுக்கு நேர்ச்சிகள் வழங்கப்படும். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும், வெளிமாநில பக்தர்களின் சிரமத்தை போக்க, மதுரையில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.