உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜய கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது

விஜய கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது

காரைக்கால்: காரைக்காலில் அகரமாங்குடி கிராமத்தில் ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் அகரமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி ஸ்ரீவிநாயகர் பூஜை.தேவதா அஷக்ஞை.கணபதி ஹோமத்துடன் துவக்கியது.கடந்த 10ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.நேற்று கும்பாபிலேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை முடிந்து * மகாதீபாரதனை நடந்தது. பின்னர் புனித நீரை சிவாச்சாரியர்கள் கோவிலை சூற்றி கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்ன விஜயகணபதி புனித நீரை விமானத்தில் மகா கும்பாபிசேஷம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள். விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !