மூணாறில் மண்டல சிறப்பு பூஜை
ADDED :1045 days ago
மூணாறு: மூணாறில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 15ம் ஆண்டு மண்டல சிறப்பு பூஜையும், ஆன்மீக ஊர்வலமும் நடந்தன.
அதனையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ள அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. கோயில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்கள் தீ மிதித்தனர். அன்னதானம் நடந்தது. முன்னதாக ஆன்மீக ஊர்வலம் நடந்தது. அதில் செண்டை மேளம், நையாண்டி மேளம், பூக்காவடி ஆகியவற்றுடன் கடவுள் வேடமணிந்தவர்கள் சூழ அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அய்யப்பன், முருகன், விநாயகர் ஆகியோர் நகர் பவனி வந்தனர். மூணாறு நகரைச் சுற்றியுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்பா சேவா சங்க தலைவர் பாலசிங், செயலாளர் பிரபாகர், பொருளாளர் முனியாண்டி ஆகியோர் செய்தனர்.