உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கருமத்தம்பட்டி: சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.

சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்யா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 10 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புனித நீர் கலசங்கள் அமைக்கப்பட்டு, முதல் கால ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 11 ம்தேதி காலை, இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 8:30 மணிக்கு, ஐஸ்வர்ய விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம், வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !