சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்
ADDED :1315 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் சூப்பிரண்டு தன்னாயிரம் தலைமையில் ரவி சிவாச்சாரியார் சிறப்பு யாகத்துடன் பூஜைகளை நடத்தி வைத்தார். 108 சங்குகளில் புனித நீர் அடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து புனித நீரைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.