உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு

ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு

உளுந்துார்பேட்டை: தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெற்றி பெற வேண்டி, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., தலைமை சார்பில் பரிக்கல் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் மோகன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் ராஜலட்சுமி, நிர்வாகிகள் சக்திவேல், கார்த்திக், கண்ணன், சுபாஷ், பரத், அஜய்குமார், செந்தில்முருகன், வேலுமணி, கவிதா, வசந்தன், பிரகாஷ், அன்பரசு, சரத்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !