உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் செவ்வாய்; பிள்ளை காளியம்மன் கோயிலில் பனை ஓலை பட்டையில் அசைவ அன்னதானம்

ஆடி முதல் செவ்வாய்; பிள்ளை காளியம்மன் கோயிலில் பனை ஓலை பட்டையில் அசைவ அன்னதானம்

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வேப்பமரத்து பிள்ளை காளியம்மன் கோயிலில் 11 ஆம் ஆண்டு ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வருடாந்திர உற்ஸவம் நடந்தது.


இன்று காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் பக்தர்களால் 100 எண்ணிக்கையில் முட்டையிடும் பருவத்தில் உள்ள கோழிகளை பலியிட்டு அவற்றை பெரிய மண்பானை மற்றும் மண் சட்டிகளில் சமையல் செய்து அம்மனுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பனை ஓலை பட்டையின் மூலமாக பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !