உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொருவளூர் ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம்

பொருவளூர் ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சாகை வார்த்தல் விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

பக்தர்கள் பால் குடங்களை சுமந்து மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் இருந்து பொருவளூர் ஆதி முத்துமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !