பத்திரகாளி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1196 days ago
கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவில் உள்ள பத்திரகாளியம்மன், ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த 2018ல் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 5ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் பத்திரகாளியம்மன், ஸ்ரீமன் நாராயணசுவாமி, லிங்கேஸ்வரர், குபேரர், பைரவர், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.