உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கொங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் அமைந்துள்ள, கொங்கு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம், காரமடை ரோட்டில் சிவன்புரம் காலனியில், கொங்கு  விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்த பின்பு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கவுமர  மடாலய குமரகுருபர சுவாமிகள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !