உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.74 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.74 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா உண்டியல் காணிக்கையாக, பக்தர்கள், 2 கோடியே, 74 லட்சத்து, 21 ஆயிரத்து, 492 ரூபாய் செலுத்தியிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாத தீப திருவிழா மற்றும் பவுர்ணமி முடிந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 2 கோடியே, 74 லட்சத்து, 21 ஆயிரத்து, 492 ரூபாய் ரொக்கம் மற்றும் 278 கிராம் தங்கம், 2,261 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக, ஒரு கோடியே, 52 லட்சத்து, 75 ஆயிரத்து, 359 ரூபாய்; தங்கம், 35 கிராம்; 1,282 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்தாண்டு, தீப திருவிழாவின்போது,  உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், ஒரு கோடியே, 21 லட்சத்து, 46 ஆயிரத்து, 133 ரூபாய், 243 கிராம் தங்கம், 979 கிராம் வெள்ளி செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !