உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதையல் தோண்ட ஐம்பொன் சிலை மீட்பு!

புதையல் தோண்ட ஐம்பொன் சிலை மீட்பு!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவரது நிலத்தில் ஐம்பொன் சிலை உள்ளி்ட்ட பழங்காலப் பொருட்கள் கிடைத்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது வீட்டிற்கு சமீபத்தில் வந்த சாமியாடி ஒருவர், பெளர்ணமி தினத்தன்று, கோவிந்தசாமிக்கு சொந்தமான நிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்று கூறியிருந்‌தார். அதன்படி, கோவிந்தசாமியும் தோண்டினார். 15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில், ஐம்பொன் சிலை ஒன்று கிடைத்தது. மீண்டும் தோண்டப்பட்ட போது. பூ‌ஜைப் பொருட்கள், பாம்பு வடிவிலான சிலைகள் உள்ளிட்டவைகள் கிடைத்தன. இத்தகவலையறிந்த கோச்சம்பள்ளி தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !