உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபாவிற்கு படைத்த அப்பம்: இரண்டாக மாறியதாக பரபரப்பு!

சீரடி சாய்பாபாவிற்கு படைத்த அப்பம்: இரண்டாக மாறியதாக பரபரப்பு!

பண்ருட்டி: சீரடி சாய்பாபாவிற்கு படைத்த ஒரு அப்பம், இரண்டாக மாறியதாக, பண்ருட்டி அருகே, பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜவேல்; டெய்லர். பெங்களூரைச் சேர்ந்த, சீரடி சாய்பாபா பக்தரான உறவினர் ஒருவர், ராஜவேலிடம் ஒரு அப்பம் கொடுத்து, "இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால், ஒரு வாரத்தில் இரண்டாக மாறும் எனத் தெரிவித்தார்.

அந்த அப்பத்தை, ராஜவேல், புதுப்பேட்டையைச் சேர்ந்த தன் தம்பி, முருகன் என்பவரிடம், 23ம் தேதி வழங்கி, சாய்பாபாவிற்கு உகந்த நாளான, வியாழக்கிழமை, பூஜையில் வைத்து வழிபடும்படி கூறினார்.கடந்த, 23ம் தேதி மாலை, அப்பத்தை ஒரு, "ஹாட்பேக்கில் வைத்து, அதன் மீது, மூன்று ஸ்பூன் அளவு டீத்தூள், ஆறு ஸ்பூன் சர்க்கரை, ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, சிவப்புத் துணியால் கட்டி, பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்தார். நேற்று முன்தினம், மாலை, 6 மணிக்கு, பூஜை அறையில் வைத்திருந்த, "ஹாட்பேக்கை திறந்து பார்த்த போது, மேலும் ஒரு அப்பம் இருந்ததைப் பார்த்து, அதிசயித்தார்.இத்தகவல் அறிந்த பலர், அப்பத்தை பார்த்துச் சென்றனர். அந்த அப்பத்தை தாமே வைத்துக்கொள்ளக் கூடாது என்பதால், புதுச்சேரியைச் சேர்ந்த தன் நண்பர் சுந்தரமூர்த்தியிடம் நேற்று கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !