உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கோமாதா பூஜை

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கோமாதா பூஜை

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில், மாதா பிறப்பையொட்டி கோமாதா பூஜை நடத்தது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு நாளிலும் கோமாதா பூஜை நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு மார்கழி மாத துவக்க நாளில், பசு மாடு கன்றுடன் அலங்கரிக்கப்பட்டு, பெருமாள் சன்னதியில் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் கோமாதாவை வழிபட்டனர். தொடர்ந்து பசு கன்றுடன் கோயிலை வலம் வந்தபோது பக்தர்கள் பஜனைகள் பாடியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !