உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி பிரதட்சணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி பிரதட்சணம்

தேவகோட்டை: மார்கழி தேய்பிறை அஷ்டமி நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி பிரதட்சணம் செய்து உலக ஜீவராசிகளுக்கு படி அளத்தல் என்பது ஐதீகம். நேற்று காலை 11:00 நகர சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து தங்கப்படியுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி வாகனங்களில் நகரில் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். நகர மக்களுக்கு படி அளத்தல் நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக மாலையில் கோவிலை அடைந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி தரிசன செய்த பக்தர்களுக்கு தங்க படியால் அரிசி வழங்கினர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !