ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமி பிரதட்சணம்
ADDED :1030 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமி பிரதட்சண வைபவம் சிறப்புடன் நடந்தது. மார்கழி அஷ்டமி பிரதட்சணத்தன்று உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாமி படியளக்கும் வைபவம் நடப்பது வழக்கம். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்தியநாதர், சிவகாமி அம்பாள் உட்பட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் ஜவகர், கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.