வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1278 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் நித்திய அன்னதானத் திட்டத்திற்காக ஹைதராபாத் சேர்ந்து தீபிகா குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி இடம் வழங்கினர் இவர்களுக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை தரிசனம் செய்த பின்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.