காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
ADDED :1030 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 1.11. 2022 முதல் நேற்று 16.11.22 வரை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை நேற்று 16 .11/2022 அன்று கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரகா சீனிவாசலு முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் கணக்கிடப் பட்டது .அதில் பணமாக ரூபாய் இரண்டு கோடியே 6 லட்சத்து 85 ஆயிரத்து 964 ; தங்கம் 90.600 கிராம் ; வெள்ளி 752 கிலோ; வெளிநாட்டு பணம் 108 கரன்சி வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.