உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் திருவாதிரை திருவிழா டிச‌. 28ல் துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் திருவாதிரை திருவிழா டிச‌. 28ல் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் டிச. 28ல் துவங்குகிறது. அன்று மூலவர் சத்யகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து மாணிக்கவாசகர் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருள்வார். சிவாச்சாரியார்களால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு ஓதுவாரால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்படும். ஜன.5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நிகழ்ச்சியும், இரவு ராட்டின திருவிழாவும், ஜன. 6ல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !