பார்க்கவ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை
ADDED :1035 days ago
மார்கழி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே சின்ன கள்ளிப்பட்டி விஜய ஸ்கந்தபுரத்தில் உள்ள யோகவல்லி சமேத பார்க்கவ நரசிம்மர் கோவிலில் மார்கழி மாத சுவாதி நட்சத்திர வைபவம் நடந்தது.
இதில் விஸ்வக்சேனர் பூஜை கலச ஆவாஹலும் மந்திர கோஷம் முடிந்து பதினாறு திரவியங்கள், பஞ்சாமிர்த அபிஷேகம், ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நரசிம்மர் பாராயணம் அஷ்டோத்திரம் சற்று மழை சேவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை திருக்கோவில் கமிட்டி மற்றும் அர்ச்சகர் ரங்கப் பிரியன் செய்திருந்தார் இதில் வர்ணனையாளர் கொங்கு பீஷ்மர் முத்துகிருஷ்ணா அய்யங்கார் கலந்து கொண்டார்.