உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் அய்யப்பன் சிலை நீராட்டு விழா

மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் அய்யப்பன் சிலை நீராட்டு விழா

வானுார்-திருச்சிற்றம்பலம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு புதிதாக வாங்கப்பட்ட அய்யப்பன் சுவாமி சிலைக்கு, இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் நீராட்டு விழா நடந்தது. வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அய்யப்பன் மூலவர் சன்னிதானம் தனியாக அமைந்துள்ளது. விழாக் காலங்களில் அய்யப்பன் சுவாமி வீதியுலாவிற்காக புதிய உற்சவர் வெண்கல சிலை வாங்கப்பட்டது. இந்த சிலைக்கு நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு, வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்து யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யப்பன் சுவாமி வீதியுலா சென்று, இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் நீராட்டு விழா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !