சூலூர் கோவில்களில் மார்கழி பூஜை: பஜனையுடன் பக்தர்கள் வழிபாடு
ADDED :1029 days ago
சூலூர்: கோவில்களில் நடக்கும் மார்கழி பூஜையில், பஜனை பாடல்கள் பாடி, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மார்கழி மாதம் என்றாலே அதிகாலை கோவில்களில் பூஜை, நாம சங்கீர்த்தனம், பஜனை பாடல்கள் பாடுவது பிரதானமாகும். சூலூர் சுற்றுவட்டார கோவில்களில் மார்கழி மாத பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வழிபடுகின்றனர். கள்ளப்பாளையம் மற்றும் இருகூர் பகுதியில் பஜனை கோஷ்டியினர் பாடல்களை பாடி, வீதி உலா வந்து கோவில்களில் நடக்கும் அலங்கார பூஜையில் பங்கேற்கின்றனர். இதேபோல், ஐயப்ப பக்தர்கள் மார்கழி பூஜையில் பங்கேற்று, சரண கோஷங்கள், ஐயப்ப சுவாமி பாடல்களை பாடி வழிபடுகூன்றனர். கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடக்கும் மார்கழி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.