வீர துர்க்கை அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை
ADDED :1027 days ago
பழநி: பழநி மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் உள்ள வீர துர்க்கை அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி, முருகன் மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் உள்ள வீர துர்க்கை அம்மன் கோயிலில், கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. சிறப்பு யாகம் நடைபெற்றது. கலச நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக மக்களின் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகள் சித்தநாதன் சன்ஸ், தனசேகரன், சித்தநாதன் பழனிவேல், ராகவன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.