உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் கோவில் யானைகள் ஆய்வு

மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் கோவில் யானைகள் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, திருக்கடையூர் கோவில் யானை அபிராமி ஆகிய 2 யானைகளையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது, யானையின் உடல்நலம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து மாவட்ட வனஅதிகாரி யோகேஷ்குமார்மீனா தலைமையில் உதவி வனபாதுகாவலர் கிருபாகரன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப்டேனியல் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அபயாம்பிகை யானையை ஆய்வு செய்து யானையின் உடல் ஆரோக்கியம், அளிக்கப்படும் உணவு முறைகள், யானையின் வெளிதோற்றம் மற்றும் யானையின் நடக்கும் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்காக பராமரிக்கப்படும் ஆவணங்களையம் குழுவினர் பார்வையிட்டனர். இதுபோல தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமியையும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !