மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்!
ADDED :4884 days ago
மானாமதுரை: மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இப்போதே விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வருடம் புதுமையாக குடை விநாயகர்,யாத்திரை விநாயகர், சிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.ரூபாய் ஐந்திலிருந்து 350 ரூபாய் வரையிலான சிலைகளை செய்து வருகின்றனர். கதிரேசன் என்பவர் கூறியதாவது: இந்த வருடம் புதுமையாக சிறிய அளவிலான குடை விநாயகர்,யாத்திரை விநாயகர், ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த வருடம் ரூபாய் 10க்கு விற்ற விநாயகர் சிலைகள் இந்த வருடம் ரூபாய் 20க்கு விற்பனையாகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர்,என்றார்.