உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி கோயிலில் சிறப்பு பூஜை

மகிஷாசுரமர்த்தினி கோயிலில் சிறப்பு பூஜை

பழநி: பழநி, மேற்கு கிரி வீதி மகிஷாசுரமர்த்தினி கோயிலில் பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம், மேற்கு கிரி வீதி மகிஷாசுரமர்த்தினி கோயிலில் தைப்பூச பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திசா ஹோமம் பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாதாரணை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்து தீபாதாரணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்துஅய்யர் கோயில் கண்காணிப்பாளர் ராஜா, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !