உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2ம் நாள் விழா: முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2ம் நாள் விழா: முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் தரித்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !