இனிமையான வாழ்வு அமைய...
ADDED :1023 days ago
இசைக் கச்சேரியோ, கதாகாலட்சபமோ எங்கு சென்றாலும் ‘மகா கணபதிம்’ என்று தொடங்கி, ‘ராமச்சந்த்ராய ஹனுமந்தாயா நமஹ’ என்று மங்களம் பாடி முடிப்பது வழக்கம். அதாவது ஒரு செயலின் ஆரம்பத்தை விநாயகர்நல்லபடியாக தொடங்கி வைப்பார். அதை சுபமாக முடித்துக் கொடுப்பவர் அனுமன். இதனால் தான் இவர்கள் இருவரையும் இணைத்து வழிபடும் வழிபாடு தொடங்கியது. இப்படி இருவரும் இணைந்த வடிவத்தை ஆத்யந்த பிரபு என்பர். ஆதி + அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். இவரை வணங்கினால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். இனிமையான வாழ்வைப் பெறலாம்.