உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில் ஹிந்து அறநிலை துறைக்கு உட்பட்டது. பல நூற்றாண்டை கடந்த பழமையான கோயில். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றாகும்.


டும் டும் டும்: நேற்று ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவமும், முன்னதாக யாகசாலை பூஜை நடந்தது. சென்னை அடையாறு, மயிலாப்பூர், பெசன்ட் நகர் உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் கண்ணன் தலைமையில் திருக்கல்யாண வைபவம், நாதஸ்வரம், மேள, தாளத்துடன் டும் டும் டும் ஒலிஓசையில் கோலாகலமாக நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிடைப்பதற்காக இந்த திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது என அர்ச்சர்கள் குழுவினர் தெரிவித்தனர். பக்தர்கள் கல்யாணம் மொய்‌ எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !