உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

சின்னமனூர்: சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் 18 படி பூஜை மற்றும் மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளாக ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

சின்னமனூர் ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் மணிமண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படிகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை மண்டல பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்த சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. திரளாக பொதுமங்கள் திரண்டு நின்று சரண கோஷம் போட்டனர். ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !