ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதியோகி ரதம்; பக்தர்கள் தரிசனம்
ADDED :1019 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: வில்லிபுத்தூருக்கு வருகை தந்த கோவை ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரதத்திற்கு மக்கள், பக்தர்கள் வரவேற்பளித்தனர். ஈஷா யோகா மையத்தின் சார்பில் 2023 பிப்ரவரி 18 இல் நடக்கும் மகாசிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி ரதம் பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் முன்பு ஆதியோகி ரதத்திற்கு மக்களும்,பக்தர்களும் வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் ரத வீதிகள், பஜார் விதிகள் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வந்தது. இதனை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் சமுத்திரராஜ், பாலசுப்ரமணியன், மகேந்திரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.