வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :1408 days ago
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் 26ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால் குடங்களை கொண்டு வந்த பின்னர், திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார ரதத்தில் ஐயப்பன் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் ஆர்.கே.பெருமாள் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.